கிடைத்தது பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.5.86 கோடி: பாராட்டு மழையில் அதிகாரிகள்

மயிலாடுதுறையில் விடுபட்ட பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 5.86 கோடியை பெற்றுத்தந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-12-11 10:00 GMT

மயிலாடுதுறையில் விடுபட்ட பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 5.86 கோடியை பெற்றுத்தந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம்,பிப்ரவரி மாதம் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு நிவாரணம் எட்டு கிராமங்களுக்கு, பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் விடுபட்டுவிட்டது. நிவாரணம் வழங்க கோரி, பலமுறை மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடுபட்டு போன ,8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார்.

அதன் அடிப்படையில், 19,655 விவசாயிகளுக்கு நிவாரணம், மற்றும் தமிழக அரசால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உளுந்து பயிறுக்கான ,நிவாரணம் ,சேர்த்து ரூபாய் 5 கோடியே 86 லட்சம் தொகையை தமிழக அரசு வழங்கியது. விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்து சீர்வரிசை பழங்களை வழங்கினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். தமிழ்நாடு முதல்வர், விவசாயத்துறை அமைச்சர் ஆகியோரின் நேரடி நடவடிக்கையால் இந்த தொகை கிடைத்தது என்று, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். தொடர்ந்து விவசாய சங்கத்தினர், நிக்ஜாம்’ புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ருபாய் 10 ஆயிரம் வழங்கினர்.

Tags:    

Similar News