தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.1.70 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

Update: 2023-12-28 07:03 GMT
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தஞ்சாவூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, கோவிலுக்கு சொந்தமான 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14 ஏக்கர் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழஉளூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நல்லமுத்து அய்யனார் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 14.17 ஏக்கர் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த நிலங்களில் சாகுபடியும் செய்து வருகிறனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பரிதியப்பர் கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில், அறநிலையத்துறை தனி தாசில்தார் பார்த்தசாரதி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், சம்மந்தப்பட்ட இடத்தை மீட்டு, அறிவிப்பு பலகையும் வைத்தனர். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு 1 கோடியே 70 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News