கோயில்களுக்கு சொந்தமான 52 ஏக்கர் நிலங்கள் மீட்பு!

குன்றத்தூரில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 52 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.

Update: 2024-01-31 08:56 GMT

குன்றத்தூரில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 52 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.

விராலிமலை ஒன்றியம் குன்றத்தூரில் அறநிலை துறை கட்டுப்பாட்டில் விஸ்வநாத ஸ்வாமி கோயில் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான 52.7 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை திருக்கோயில்கள் வசம் ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருக்கோயில்கள் செயல் அலுவலர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை அடுத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து கோயில்கள் வசம் ஒப்படைத்ததாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதன்படி புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் கோயில் நிலங்கள் மீட்டு தாசில்தார் வனிதா, திருக்கோயில்கள் செயல் அலுவலர் கார்த்திகேயன், விராலிமலை ஆய்வாளர் யசோதா மற்றும் பணியாளர்கள் குன்னத்தூர் சென்று ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 52.7 ஏக்கர் நிலத்தை மீட்டு திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News