ரூ.600 கோடி மதிப்பிலான பஞ்சமி நிலம் மீட்பு
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் தனியார் நிறுவனத்தின் வசம் இருந்த ரூ.600 கோடி மதிப்பிலான 14.52 ஏக்கர் பஞ்சமி நிலம் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது.
Update: 2024-01-07 07:47 GMT
மதுரை, அழகர்கோவில் சாலை, தாமரைத் தொட்டி அருகே ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள சுமார் 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 14 ஏக்கர் 52 செண்ட் அரசு நிலங்கள் தி/மதுரா மில்ஸ் கம்பெனி லிமிடெட் (தற்போதைய மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கு 1923 மற்றும் 1925 ம் ஆண்டுகளில் கிரௌண்ட் ரெண்ட்(Ground Rent) அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த நில ஒப்பந்தத்தில் ஒப்படை விதிமீறல் கண்டறியப்பட்டதால் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலத்தை மீட்சு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.