தென்காசி மாவட்டத்தில் ரூ.8கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் ரூ.8கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டது.

Update: 2024-02-01 10:54 GMT
ரூ. 8 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகத்திற்குச் சொந்தமான ரூ. 8 மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டன.

கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் கட்டளைதாரா்கள், மாலைக்கட்டு வரி தாரா்கள் முறையாக கட்டளை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா். ஒரு சில இடங்களை கட்டளைதாரா்கள், சிலா் உள்குத்தகைக்கு விட்டுஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

இதுகுறித்து பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் தொடா்புடைய நபா்கள்கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில், கட்டளை செலுத்தாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரா், இலத்தூா் மதுநாதசுவாமி, புளியறை கிருஷ்ணசாமி ஆகிய கோயில்களுக்குச் சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபா்களிடம் இருந்து 4 ஏக்கா் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை நிறுவப்பட்டது.

இதன் மதிப்பு சுமாா் ரூ. 8 கோடியாகும். இந்நிகழ்வில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபாஜி ராமகிருஷ்ணன், கண்காணிப்பாளா் ஆனந்த், பொறியாளா் அய்யப்பன், தொழில் துட்ப உதவியாளா் பிரேம், திமுக கிளைச் செயலா் கிளாங்காடு ராமா், ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News