மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் திங்கட்கிழமை அன்று 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகும் பொருட்டு புத்தாக்க பயிற்சி மனநல ஆலோசகர் டாக்டர் பாபு ரங்கராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி இயக்குனர் பி. சுப்பிரமணியம், இயக்குனர் மணிவண்ணன், பள்ளியின் முதல்வர் மோகன் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் டாக்டர் பாபு ரங்கராஜன அவர்கள் மாணவர்களிடையே உரையாடும் பொழுது இறந்தகாலம் என்பது நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது கிடையாது. ஆனால் நிகழ்காலம் நமது எதிர்காலத்தை மிகச் சிறப்பாக தீர்மானிக்கும் என்பதால் தற்பொழுது இருந்து முயற்சி செய்தால் கூட சிறந்த மதிப்பெண்களை பெற இயலும் என்பதை மாணவ மாணவிகளுக்கு வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.