பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பாவை கல்வி நிறுவனங்களில் புதியதாக பணியில் இணைந்துள்ள பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Update: 2023-12-10 17:32 GMT

பாவை கல்வி நிறுவனங்களில் புதியதாக பணியில் இணைந்துள்ள பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாவை கல்வி நிறுவனங்களில் பாவை கல்விக் குழுமத்தில் புதியதாக பேராசிரியர்களாக பணியில் இணைந்துள்ளவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மேம்பாடு துறையின் முதன்மையர் கே.செல்வி அனைவரையும் வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவில் வாழ்த்துரை வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து ஆசிரியர் மேம்பாடு துறையின் தலைவர் முர்சிதா பானு புத்தாக்கப்பயிற்சியினை பற்றிய முன்னுரை வழங்கினார். நிழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் முதன்மையர் (ஆலோசனை) ஜெயலெட்சுமி, அனைத்து கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News