வீட்டை காலி செய்ய மறுத்தவர் கொலை - கூலிப்படையினர் கைது
நாமகிரிப்பேட்டையில் வீட்டை காலி செய்ய மறுத்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தொழில் காரணமாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். இவருக்கு ஒரு மகள் இவரை திருச்சியில் உள்ள அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பொன்னுசாமிக்கு சொந்தமான நாமகிரிப்பேட்டை ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டை ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தை சேர்ந்த நாகரத்தினம் 65., என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
பல வருடங்களாக நாகரத்தினம் அந்த வீட்டில் குடியிருந்து வருகிறார் தற்போது வீட்டை காலி செய்யும் படி வீட்டின் உரிமையாளர் பொன்னுசாமி கூறியுள்ளார். வீட்டை காலி செய்ய முடியாது என நாகரத்தினம் கூறியுள்ளார். இது தொடர்பாக ராசிபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் பொன்னுசாமி வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதிகள் வீட்டை வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். மேலும் இது குறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
நாகரத்தினம் இந்நிலையில் கடந்த வாரம் நாகரத்தினம் ஐயப்பன் நகரில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பிரதத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் இது தற்கொலை அல்ல கொலை செய்ததற்கான அடையாளம் உள்ளது என கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பொன்னுசாமி மற்றும் அவரது மகள் மருமகன் ஆகியோர் சேர்ந்து கூலிப்படையின் மூலம் நாகரத்தினத்தை கொலை செய்தது விசாரணை மூலம் தெரியவந்தது இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் 31., மற்றும் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள ராமாயி அம்மன் திருவை சேர்ந்த ராம் என்ற சுரேஷ் 24., ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் கொலைக்கு காரணமான பொன்னுசாமி அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.