நத்தத்தில் வளாகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வளாக தேர்வு நடைபெற்றது.இதற்கு என்.பி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன் தலைமை தாங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-04 11:33 GMT
தேர்வில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வளாக தேர்வு நடைபெற்றது. இதற்கு என்.பி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் கோவையைச் சேர்ந்த கே.ஜி.இன்விக்டா சர்வீசஸ் என்ற நிறுவனம் கலந்து கொண்டு குழு விவாதம்,நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்தது. இந்த தேர்வு மூன்று நாட்கள் நடந்தது. நிறைவு தேர்வில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் தங்கள் நிறுவனத்தை பற்றியும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் அவர்களுக்கான பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.