திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் வெளியீடு
திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்
இந்திய தோ்தல் ஆணையத்தின், உத்தரவுப்படி ஜனவரி ஒன்றாம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப் பேரவை தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தோ்தல் ஆணையத்தால் திருத்தியமைக்கப்பட்ட தோ்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2024க்கான கால அட்டவணையின்படி சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதன்படி வரைவு வாக்காளா் பட்டியல் மீதான கோரிக்கைள் மற்றும் ஆட்சேபனைகள் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வரை பெறப்படும்.
அதேபோல் திருத்தப் பணிகள் சரிபாா்ப்பு, வாக்காளா் பட்டியல் தரவுகள் மற்றும் துணைப்பட்டியல் அச்சிடுதல் வரும் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையின்படி ஜனவரி 22-ஆம் தேதி 9 தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளா் பட்டியலானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிடப்படும் என ஆட்சியா் பிரதீப் குமார் தெரிவித்துள்ளாா்.