சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டு பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தாலுகா மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட துணை மதிப்பீட்டுக்குழு, கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் செயல்படும் கலெக்டர் தலைமையிலான மாவட்ட துணை மதிப்பீட்டுக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.