தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விடுவிப்பு

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 லட்சம் ஆவணங்களை சமர்பித்ததால் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2024-04-11 15:53 GMT

பைல் படம் 

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல்நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் –நிலையான கண்காணிக்கும் குழுக்கள்-வீடியோ கண்காணிக்கும் குழுக்கள்- பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூல அலுவலககங்களில் ஒப்படைக்கப்பட்டது-தேர்தல்மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டது- இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென 72 பறக்கும் படைகுழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 10..04.2024 அன்று தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படைக் குழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில் தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ, 1,46,800/- ரூ.83,490/- என ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 290 பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்களை சமர்பித்து விடுவித்துக்கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மாவட்ட அளவில் தினசரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News