30 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் 30ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு கோயம்புத்தூர் எல்சி மருத்துவமனையின் மெய்நிகர் மீட்புபடை அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையும் இணைந்து வெள்ள நிவாரணமாக ரூ30 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை 30 ஆயிரம் பேருக்கு கடந்த 1 வார காலமாக வழங்கினர்.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், சிறுத்தொண்டநல்லூர், முக்காணி, ஆத்தூர், முடக்கத்தான்விளை, செட்டிகுளம், கோட்டைக்காடு, காமராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் எல்சி மருத்துவமனை மெய்நிகர் மீட்பு படை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மருத்துவர் வித்யாராஜன், அற்புதம் மருத்துவமனை டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங், வி.ஆர்.எப். உறுப்பினர்கள் அனிதா, சாந்தகுமார், அற்புதம் மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஜெபன், மேலாளர் ரூபன் சிங் ஆகியோர் செய்திருந்தனர்.