மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல சமாரியன் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-16 04:59 GMT

மக்களுக்கு நிவாரணம்!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையுடன் இணைந்த நல்ல சமாரியன் சங்கங்கள் 75-க்கும் மேற்பட்டவை இந்தியாவின் பல இடங்களிலும், அந்தமான் மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேவையுள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகள் ஜாதி, மத, இன பேதமின்றி செய்யப்பட்டு வருகிறது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை மற்றும் நல்ல சமாரியன் சங்கம் ஆகியவற்றின் நிறுவனர் சகோ.மோகன் சி. லாசரஸ் ஆலோசனையின்படி நல்ல சமாரியன் சங்கத்தின் சென்னை கிளை சார்பாக சங்க உறுப்பினர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். இதில், ராயபுரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், மூலகொத்தலம், புளியந்தோப்பு, முகப்பேர், மாதவரம், தாம்பரம் வரதராஜபுரம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், பாடி, பாரதபுரம், செங்கல்பட்டு புறநகர் பகுதிகள், திருப்போரூர் போன்ற இடங்களில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அந்தப்பகுதிகளில் சுமார் 6500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நல்ல சமாரியன் சங்க சென்னை கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News