சென்னை மக்களுக்கு மரக்காணத்தில் இருந்து நிவாரண பொருட்கள்.

சென்னை மக்களுக்கு மரக்காணத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-12-11 11:35 GMT
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவியினை வழங்கி வருகிறார்கள், அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, கடந்த 06.12.2023 அன்றைய தினத்திலிருந்து மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பொருட்கள் 07 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பொருட்கள் அனுப்புவதற்கும் வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

அந்த வகையில் மரக்காணம் வட்டத்திலிருந்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் 10 கிலோ அரிசி மூட்டைகள் 85, 25 கிலோ அரிசி மூட்டைகள் 25, பெட்சீட்டுகள் 500, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்கள் 1500 மற்றும் ரஸ்க் பாக்கெட்டுகள் என மொத்தம் 2 லட்சம் மதிப்பீட்டிலான பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது வருவாய் துறை துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News