பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவேந்தல் அணிவகுப்பு

பணியில் உயிர் நீத்த 188 காவல்துறை அதிகாரிகளுக்கு 60 குண்டுகள் முழங்க நினைவேந்தல் அணிவகுப்பு நடைபெற்றது

Update: 2023-10-21 09:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பணியில் இருந்து வீரதீரச் செயல் புரிந்து உயிர் நீத்த 188 காவல் அதகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவேந்தல் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நினைவேந்தல் அனுபவத்தில் 60 குண்டுகள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் அசோகன் மற்றும் அனைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவலர்களும் பங்கேற்று உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News