நீதிமன்ற உத்தரவுபடி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

மயிலாடுதுறை அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்.

Update: 2023-10-31 14:03 GMT

ஆக்கிரமிப்பு அகற்றம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மயிலாடுதுறை அருகே சந்திக்கரை வாய்க்காங் கரையில் , மூவலூர் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், விவசாயப் பணிகளுக்கு இடையூறாக, வேளாண் இயந்திரங்கள் செல்ல முடியாதபடி, ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இதனால், வாய்க்கால் தூர்வாராமல் கிடந்தது. இது குறித்து  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாய சங்கத்தினர் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை அடுத்து, விவசாயி உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். நீதிமன்ற உத்தரவுபடி, இன்று வாய்க்கால் கரையில், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 18 சதுர மீட்டரில் இருந்த மரங்களையும், மின் இணைப்பையும் துண்டித்து,  பம்புசெட்டுக்கு போடப்பட்டிருந்த  கான்கிரீட் ஸ்லாப் சுவரையும் பொதுப்பணித்துறை பணியாளர்கள்  அகற்றி வசம் எடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News