நீதிமன்ற உத்தரவின் படி அரசு அலுவலகங்கள் உட்பட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின் படி அரசு அலுவலகங்கள் உட்பட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2023-12-09 15:55 GMT

ஆகிரமிப்புகள்  அகற்றப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தில் பெரிய ஊரணி ஐந்து வட்டக்கிணறு பகுதியில் 26 ஏக்கரில் நீர்நிலை புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்சி அலுவலகங்கள், அரசு பொது கழிப்பறை, நூலகம், ஊராட்சி அலுவலகம், கிராம சேவை மையம், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், கோயில் போன்றவை கட்டப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2021 ஜூலையில் சாலைகிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் வருவாய்த்துறையினர் ஒரு சில கடைகளை மட்டுமே அகற்றினர். அதே சமயத்தில் 11 பேர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். அந்த மனுக்களை தள்ளுபடி செய்த அப்போதைய ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆக்கிரமிப்பில் உள்ள அரசு கட்டிடங்கள் உட்பட 60 கடைகளை இடித்து அகற்ற வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இந்த இடத்தில் 13 பேர் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரிடம் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு சீராய்வு மனுக்களை அரசு கூடுதல் தலைமைச் செயலர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு வருகிறது

Tags:    

Similar News