திருப்பூர் நஞ்சப்பா பள்ளி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

Update: 2023-12-03 11:45 GMT

ஆக்கிரமிப்பு அகற்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு  முன்பு  செல்லும் ரோட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபாதைகளில் தற்காலிக பனியன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பண்டிகை முடிந்து நீண்ட நாட்கள் ஆகிய பின்னரும் சில கடைகள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்து நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதைதொடர்ந்து  மாநகராட்சி நகரமைப்பு திட்டப்பிரிவு இளம்பொறியாளர் கோவிந்தபிரபாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபாதையில் இருந்த தற்காலிக பனியன் கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல் சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டி கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அருகாமையில் இருந்த பனியன் பஜார் கடைகளும் அகற்றப்படுவதாக நினைத்து அங்கிருந்த வியாபாரிகள் அனைவரும் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News