காளவாசல் பைபாஸில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் பரிமுதல் செய்ததால் பரபரப்பு

Update: 2023-12-15 01:51 GMT

காளவாசல் பைபாஸில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை காளவாசல் பைபாஸ் சலையில் அதிகம் போக்குவரத்து மிகுந்த பகுதி ஆகும்.இந்த பகுதியில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ,.கனரக வாகனம், என்று ஒரு நாளைக்கு ஒரு லெட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் பயணிக்க கூடிய இடமாகும் இங்கு இப்பகுதியில் வசிக்கும் சிலர் 70 க்கும் மேற்ப்பட்ட சில்லறை வர்த்தக தள்ளுவண்டி கடைகள் நடத்தி வந்தனர்.இதனை அகற்றச் சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கடை நடத்தி வருபவர்களிடம் ஆயிரம் ரூபாய் முதல் 2000 வரை அபராதம் விதித்து இங்கு சாலையோரம் கடை வைக்கக் கூடாது இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று எச்சரித்தும் மீண்டும் கடை நடத்தி வந்த நிலையில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் தலைமையில் 70 க்கும் மேற்ப்பட்ட கடைகளை 30க்கும் மேற்ப்பட்ட காவல்துறை பாதுகாப்புடன் JCB வாகனம் மூலம் அகற்றி தள்ளுவண்டிகளும் பறிமுதல் செய்தனர் கடை நடத்தி வந்த உரிமையாளர்கள் அதிக அளவில் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News