குமரி கடற்கரையில் அனுமதியின்றி இயங்கிய கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை பகுதியில் அனுமதியின்றி இயங்கிய கடைகள் போலீசார் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறையினர் அகற்றினர்.

Update: 2024-04-29 07:19 GMT

அகற்றப்பட்ட கடைகள் 

சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம் கடற்கரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி ஏராளமான கடைகள் இயங்கி வந்தன. இன்னிலையில் அங்கு  வியாபாரம் செய்து வந்த ஐஸ்கிரீம் வியாபாரிகள் இரு தரப்பிற்கு இடையே தொழில் போட்டி காரணமாக நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் வியாபாரி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.இந்நிலையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகளை போலீசார் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்  அகற்றினர்.  மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் இது போன்ற அனுமதி இன்றி செயல்படும் கடைகளை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News