ஆரணி அருகே திருட்டு மணல் குவியல்கள் அகற்றம்

ஆரணி அருகே கடத்துவதற்காக குவித்து வைக்கப்பட்ட மணல் குவியல்கள் இயந்திரங்கள் மூலம் சமப்படுத்தி அழிக்கப்பபட்டது.

Update: 2023-10-30 04:54 GMT

சமப்படுத்தும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலைமாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கமண்டல நாக நதி படுகையில் மணல் கடத்துவதற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த குவியல்கள் நேற்று அகற்றப்பட்டன. ஆரணியை அடுத்த குண்ணத்தூர், முள்ளிப்பட்டு பகுதி கமண்டல நாக நதி படுகையில் மணல் கடத்துவோர் பகல் நேரங்களில் மணலை சேமித்து குவியல் குவியலாக சேகரித்து வைக்கின்றனர். பின்னர், அந்த மணலை இரவு நேரங்களில் மாட்டு வண்டி, டிராக்டர்களில் கடத்திச் சென்று விற்பனை செய்வதாக ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் வட்டாட்சியர் மஞ்சுளாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் முள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளர் மணிமாறன், கிராம நிர்வாக அலுவலர் கதிர் மற்றும் வருவாய்த் துறை யினர் ஞாயிற்றுக்கிழமை காலை குண்ணத்தூர் பகுதியில் உள்ள கமண்டல நாக நதி படுகையில் ஆய்வு செய்தனர். அப்போது, குவியல் குவியலாக சேர்த்து வைத்திருந்த மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் கலைத்து சமன்படுத்தினர்.
Tags:    

Similar News