அஷ்டபுஜர் தேரோடும் வீதிகளில் இடையூறு மரக்கிளைகள் அகற்றம்

சுவாமி வீதியுலாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,சாலையின் குறுக்கே நீண்டு வளர்ந்து இருந்த மரக்கிளைகளை அகற்றினர்

Update: 2024-04-30 16:41 GMT

மரங்கள் அகற்றம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். இதில், ஏழாம் நாள் உற்சவமான நாளை தேரோட்டம் நடக்கிறது.

இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் அஷ்டபுஜ பெருமாள் டி.கே.நம்பி தெரு, சி.வி.ராஜகோபால் தெரு, சி.என்.அண்ணாதுரை தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதி வழியாக பவனி வருகிறார். தேர் பவனி வரும் சாலைகளில்,

பல இடங்களில் சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள், மின்ஒயர் செல்லும் மின்தட பாதையை ஒட்டியும், தேரோட்டத்திற்கு இடையூறாகவும் சாலை பக்கம் நீண்டு வளர்ந்து இருந்தன. இதையடுத்து, தேரோட்டம் தடையின்றி நடக்கும் வகையில்,

காஞ்சிபுரம் நகர மின்வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுவாமி வீதியுலாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்,சாலையின் குறுக்கே நீண்டு வளர்ந்து இருந்த மரக்கிளைகளை நேற்று அகற்றினர்."

Tags:    

Similar News