திருமழிசை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி சீரமைப்பு

திருமழிசை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது.

Update: 2024-04-07 14:05 GMT

சீரமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி

திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியில் ஜவஹர் தெருவில் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

இந்த குடிநீர் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்பாடில்லாமல் குப்பை கொட்டும் இடம் மற்றும் விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும் மாறி வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை,

அடுத்து இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 1.90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Tags:    

Similar News