குடிநீர் டேங்க் குழாய்கள் சீரமைப்பு

குமாரபாளையத்தில் குடிநீர் டேங்க் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.

Update: 2024-05-31 13:17 GMT

குழாய் சீரமைப்பு 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் வாட்டர் டேங்க் உள்ளது. இதில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக இதிலிருந்து எடுத்து விடப்படும் தண்ணீர், குறைந்த கால அளவில் மட்டும் வந்து, முற்றிலுமாக தண்ணீர் தீர்ந்து விடும் நிலை இருந்து வந்தது.

மேலும் இப்பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் எடுத்து விடுவதால், பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கப்பெறாமல் இருந்து வந்தது. ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் இது குறித்து புகார் செய்தனர்.

இதன்படி ஊராட்சி தலைவி புஷ்பா நேரில் ஆய்வு செய்து, குடிநீர் குழாய் பழுதாகி இருந்ததை கண்டறிந்தார். பழுதான குடிநீர் குழாயை அகற்றி, புதிய குழாய் பொருத்தப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News