பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின ஓவியப்போட்டி
சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின ஓவியப்போட்டி நாளை நடக்கிறது
குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், குழந்தைகளின் ஓவிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடனும் சேலம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஓவிய போட்டி நடக்கிறது. பிரி கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கிற மாணவ- மாணவிகளுக்கு மொத்தம் 42 பரிசுகளும், சான்றிதழ்களும், கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களுக்கு விருப்பமான எந்த ஆக்கபூர்வமான படம் வேண்டுமானாலும் வரையலாம். எனினும் வரைந்திருக்கும் படமானது எதாவது ஒரு கருப்பொருளை உணர்த்துவதாக இருந்தால் அது பரிசு பெறும் வாய்ப்பை அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர்களை ஒய்.எம்.சி.ஏ.
அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஓவியம் வரைவதற்கான அட்டை வழங்கப்படும். மற்ற உபகரணங்களை மாணவர்கள் எடுத்து வர ேவண்டும் என்று சேலம் ஒய்.எம்.சி.ஏ. பொதுச்செயலாளர் ஜோஸ் தெரிவித்துள்ளார்.