குடியரசு தின முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-01-21 07:15 GMT

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகின்ற 26.01.2024 அன்று கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழா - 2024-ஐ முன்னிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2024 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. காவல்துறை சார்பில் தருவை மைதான வளாகம் அலங்காரம் செய்தல், தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்தல், கொடி கம்பம் மற்றும் கொடி ஏற்றும் மேடையில் வண்ணம் தீட்டுதல், கோலம் அமைத்தல் (ஆயுதப்படை), காவல் அணிவகுப்பில் தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம் ஆகியவற்றையும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுத்தல்,  காவல் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட ஈப்பு ஏற்பாடு செய்தல், காவல் துறை பதக்கம் / சான்றிதழ் பெறும் நபர்களை ஏற்பாடு செய்தல், காவல் துறை பதக்கம் / சான்றிதழ் பெறும் காவல் துறை அலுவலர்களின் பட்டியல் மற்றும் சான்றிதழ் 24.01.2024 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு துறையினர் அணிவகுப்பில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல், தீ தடுப்பு கருவிகள் வைத்திருக்க ஏற்பாடு செய்தல், தீயணைப்பு வாகனம் ஒன்றினை மைதானத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்தல், தீயணைப்பு சாகசம் அல்லது விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல் வேண்டும்.

மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்தல், குடியரசு தின விழா மைதானம் தூய்மையாக இருக்க தற்காலிக குப்பை தொட்டிகள் அமைக்கவும் மற்றும் துப்புரவு பணியாளர்களை பணியமர்த்துதல் வேண்டும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு அரசு உத்தரவுபடி அரசு விழாக்களில் நாட்டுப்பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தட்டு இன்றி வாய்வழியாக பாடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆகவே இனிமையான குரல் வளம் கொண்ட பாடும் தகுதியுள்ள ஆசிரியர்களை குடியரசுதின விழாவின் போது நாட்டுப்பண் பாட தயார்படுத்தி மக்கள் தொடர்பு அலுவலருடன் இணைந்து செயல்படுதல், பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பள்ளியின் பெயர் மற்றும் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்களின் விபரம் 23.01.2024-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கிட ஏற்பாடு செய்தல் வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விழா அழைப்பிதழ் மற்றும் நற்சான்றிதழ் அச்சடித்தல் வேண்டும், ஒலி பெருக்கி வசதி, ஜென்செட் வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும், பந்தல் நாற்காலி, மேஜை, சாமியான பந்தல் சேர்கள் மற்றும் ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடு செய்தல் வேண்டும்,  போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களை அழைத்து வரவும் திரும்ப அவர்களுடைய இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கவும் முதன்மை கல்வி அலுவலரோடு கலந்து ஆலோசித்து பேருந்து வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும். மின்சாரத்துறை சார்பில் குடியரசு தின விழா நடைபெறும் மைதானத்தில் தடையின்றி மின்சார வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் விபரங்கள் அனைத்து துறைகளிலும் பெற்று பட்டியல் தயார் செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விழா நடைபெறும் இடத்தில் வண்ண அலங்கார பூந்தொட்டி வைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பாக பணிபுரிந்த கூட்டுறவு வங்கி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர், அரசு இசைப்பள்ளி விழா துவங்கும் முன்பு மங்கள இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்தல் வேண்டும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழா நடைபெறும் தருவை மைதானம் செம்மைப்படுத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் விழா நடைபெறும் இடத்தில் நாற்காலி மற்றும் மங்கள வாத்திய குழுவினருக்கு சிறிய மேடை அமைத்தல், மங்கள வாத்திய குழுவினருக்கு வாகன ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். பேரூராட்சிகள் துறை சார்பில் விழா மேடை, பந்தல், அமைத்திட ஏற்பாடு செய்தல் வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அமைச்சர் பெருமக்கள், மாவட்ட நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்;, சட்டமன்ற உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட மற்றும் மொழி போராட்ட தியாகிகள், கலைமாமணி, திருவள்ளுவர், பெரியார், அண்ணா, வி.க. பாரதியார், பாரதிதாசன் விருது பெற்ற நபர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்க்கு சுதந்திர தினவிழா அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்தல் வேண்டும் சுகாதாரத்துறை சார்பில் குடியரசு தின விழாவில் மருத்துவ வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்தல், விழா நடைபெறும் மைதானம் அருகில் 108 அவசர ஊர்தி ஒன்று நிறுத்தி வைக்கவும் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழு ஒன்றினை ஏற்பாடு செய்தல் வேண்டும், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூகநலத்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத் துறை வருவாய்துறை மற்றும் இதர துறைகள் மூலம் பயனாளிகள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்தல் வேண்டும்.

தங்களது துறைகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் விபரங்களை நான்கு பிரதிகள் தயார் செய்து தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அவர்களிடம் 23.01.2024-க்குள் ஒப்படைக்க வேண்டும். நகல் சான்றினை வரவேற்பு பிரிவில் ஒப்படைக்க வேண்டும். மேற்கண்ட பட்டியலை TAU-Marutham Font-ல் மட்டும் தயார் செய்து receptionthoothukudi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டும்.  பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.  பயனாளிகள் அனைவரையும் 26.01.2024 அன்று காலை 7.00 மணிக்கு விழா பந்தலில் வரிசையாக அமர வைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  அனைத்து அலுவலர்களும் தங்கள் துறை தலைவர் தலைமையில் விழாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) செந்தில்வேல் முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News