சோமங்கலம் - தாம்பரம் இடையே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
சோமங்கலம் - தாம்பரம் இடையே காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-02-15 06:45 GMT
தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் வழியே குன்றத்துாருக்கு, அரசு பேருந்து தடம் எண்: 89டி இயக்கப்படுகிறது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இத்தடத்தின் 29 நிறுத்தங்களில், சம்பந்தப்பட்ட பேருந்தில் ஏறி பயணிக்கின்றனர். காலை நேரத்தில், அதிகளவு பயணியர் காத்திருக்கும் நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சோமங்கலம் வழியே தாம்பரத்திற்கு, காலை 7: 00 மணி முதல் 9: 00 மணி வரை, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.