பேத்தியை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கோரிக்கை

பொருளாதார சுமை காரணமாக தாய் இல்லாத தனது 15 வயது பேத்தியை, காப்பகத்தில் பராமரிக்க வலியுறுத்தி 57 வயதான தாத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2024-01-04 03:14 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் பகுதி 57 வயது நபர் ஒருவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.  அவரது மகன் மனைவியை பிரிந்து இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வசித்து வருகிறார். மகனின் மனைவி  ஏழு ஆண்டுகளாக மாயமாகிவிட்டார்.       இவர்களின் 15 வயதான சிறுமியை தொழிலாளி கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தனது தாத்தா பாலில் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் புகார் அளித்து, பிரிந்து சென்றார்.        

Advertisement

இந்த நிலையில் மீண்டும் அந்த சிறுமி திடீரென தனது தாத்தாவுடன் வந்து தங்கி உள்ளார். தொழிலாளி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் அந்த சிறுமியை அழைத்துச் சென்று, சிறுமியின் தந்தையிடம் ஒப்படைக்க புகார் அளித்தார்.        மேலும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சென்று, ஒரு வேளை சாப்பாட்டுக்கு  கஷ்டப்படும் தன்னால் தனது பேத்தியை பாதுகாக்க முடியாது எனவும், அவளை காப்பகத்தில் ஒப்படைக்க  எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எஸ்பி சுந்தரவனம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News