தென் மண்டல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து வந்த மாணவர்கள் அவதி
போளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 12:34 GMT
போளூர் வந்த மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பள்ளியில் நடைபெறும் தென் மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து சுமார் 30 மாணவர்கள் ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸில் வந்த போது போளூரில் நிறுத்தம் இல்லாத காரணத்தினால் ஆரணி ரோடு இரயில் நிலையத்தில் இறங்கியதால் மீண்டும் போளுர் வர மாணவர்கள் அவதியடைந்து சிரமத்துக்குள்ளாகினர். எனவே போளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.