மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-05 07:25 GMT

கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்திரா நகர் பிரிவு ரோடு வழியாக செல்ல வேண்டும்.மேலும் ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆத்துார், கருங்கல்பட்டி, பண்ணப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து கூலி வேலை செய்ய தொழிலாளர்கள் பள்ளப்பட்டி செல்ல வேண்டுமானால் இந்திரா நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்ல வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வரும் நிலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News