எஸ்.சி பட்டியலில் கிறிஸ்தவ பறையர்களை சேர்க்க கோரிக்கை
சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தெரிவித்தனர்
திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப் நடைபெற்றது . இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாஸ் பிரகாஷ் கூறும்போது தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் 6.12 சதவீதமாகவும் இதில் 60% கிறிஸ்தவ பறையர்கள் ஆவார்கள் எனவும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4 சதவீதம் தாங்கள் இருப்பதாகவும் ஆனால் அரசியல் கல்வி வேலை வாய்ப்பு சமூக பொருளாதார மற்றும் திருச்சபைகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் , தமிழ்நாட்டில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பறையர்கள் கூட தேர்வு செய்யப்படவில்லை என கூறினார் .
மேலும் மற்ற மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்தது போல தங்களையும் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் கடந்த 2004 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதுவரை எந்த பயனும் இல்லை எனவும் மற்ற மதத்தினருக்கு வழங்கும் சலுகைகளை தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் தங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் அனைத்து கிறிஸ்தவ அமைப்பினரும் ஒன்று சேர்த்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவ பறையர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தாங்கள் சுயேட்ச்சையாக போட்டி போட உள்ளதாக கூறினர்.