ஆத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை
ஆத்தூர் அருகே சாலையில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி. விபத்து ஏற்படும் அபாயதால் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
By : King 24x7 Angel
Update: 2024-02-26 11:41 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூட்ரோடு பகுதியில் இருந்து ராசிபுரம் வரையிலான சாலை விரிவாக்க பணி நடைபெற்றது தொடர்ந்து சேலம் விருதாச்சலம் ரயில் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆத்தூரில் இருந்து ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களை ஹவுசிங் போர்டு பகுதி வழியாக செல்வதால் அப்பகுதியில் சாலையில் 2 அடி அளவில் பள்ளம் இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி விழும் சூழல் நிலவுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.