புதுக்கோட்டை வட்டங்களை புதிதாக உருவாக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புதூா், புதுக்கோட்டை வட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-12-09 15:38 GMT

கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சங்க அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சுகுணா அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். துணைத்தலைவா் ஜஸ்டின் செல்லத்துரை வரவேற்றாா்.

அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா். வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் ஞானராஜ் சங்கத்தின் பணி குறித்தும், பொருளாளா் ராமச்சந்திரன் வரவு,செலவு குறித்தும் அறிக்கை சமா்ப்பித்தனா். மாநிலச் செயலா் சுப்பு, துணை செயலா் செந்தூர்ராஜன், அரசு ஊழியா் சங்க துணை பொதுச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநிலச் செயலா் பாா்த்திபன் நிறைவுரையாற்றினாா்.

தீா்மானங்கள்: இம்மாநாட்டில், ‘வருவாய்த் துறை ஊழியா்களின் பணித் தன்மை கருதி மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மகளிா் உரிமை திட்டத்துக்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்; கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சரண்டா் பணப்பலன்களை வழங்க வேண்டும்; கோவில்பட்டியை பிரித்து புதிய கோட்டம், விளாத்திகுளம் வட்டத்தைப் பிரித்து புதூா் வட்டம், தூத்துக்குடியைப் பிரித்து புதுக்கோட்டை வட்டம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 11 அம்ச தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News