நகராட்சி கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை !

பழைய அலுவலகத்தில் இடநெருக்கடி உள்ளதால், புதிய கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-03-02 08:45 GMT

கட்டுமான பணி

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளில் 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2021ல் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக, மாங்காடு தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட அலுவலகத்தில், தற்போது நகராட்சி அலுவலகம் இயங்குவதால், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாங்காடு ஓம்சக்தி நகரில் 3.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பழைய அலுவலகத்தில் இடநெருக்கடி உள்ளதால், புதிய கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நகராட்சி பொறியாளர் செந்தில் கூறுகையில், புதிய அலுவலக கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றார்.
Tags:    

Similar News