புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

காங்கேயம் நகராட்சியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும்  பணியால் சாலைகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-20 13:35 GMT

குண்டும் குழியுமான சாலைகள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கடந்த சில மாதங்களாக அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள்,கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே நகராட்சி சார்பில் சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களில் நிலம் பறிக்கப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்குவதற்காக இது போன்ற அனைத்து பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் அதிகப்படியான வறட்சியை காங்கேயம் எதிர் கொண்டு வருகிறது. எனவே பொதுமக்களும் தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

மேலும் குழிகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க உடனடியாக இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு குடிநீர் குழாய் இணைப்பு அமைத்திட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News