தேஜஸ் அதிவிரைவு ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்ல கோரிக்கை

தேஜஸ் அதிவிரைவு ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரெயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2024-03-29 07:01 GMT

விழுப்புரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரெயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் விழுப்புரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்மண்டல உதவி செயலாளர் இருசப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கி முத்து முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சண்முகராஜா வரவேற்றார். தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக கிளையின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றினார்.

இக்கூட்டத்தில், நீண்ட நாட்களாக விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேஜஸ் அதிவிரைவு ரெயில், விழுப்புரத்தில் நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கும்படி ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துவது, விழுப்புரத்தில் அதிக ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களின் நலன் கருதி விழுப்புரம் ரெயில்வே மருத்துவமனை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட வேண்டும்,ரெயில்வே துறையில் தனியார் துறையை புகுத்துவதை வன்மையாக கண்டிப்பது, டாக்டர் அம்பேத்கர் உருவ சிலையை விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு நிறுவுவதற்கு அனுமதி வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கோட்ட நிர்வா கிகள் ராகுல்ஆனந்த், ஜேம்ஸ், தியாகு, பூமிநாதன், கருப்பையன், பூபதிசிவா, விழுப்புரம் கிளை நிர்வாகிகள் சதீஷ்குமார், பார்த்தசா ரதி, மணிவண்ணன், நிஷாந்த், ராஜ்குமார், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News