திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் தனது பெயரை போலியாக பயன்படுத்தி பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2024-01-25 15:32 GMT
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததில் அனைவருக்கும் வணக்கம் எனது புகைப்படத்தையும் எனது பெயரையும் பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலமாகவும் facebook மூலமாகவும் பணத்தை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தால் தயவு செய்து யாரும் அனுப்ப வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது புகைப்படத்தையும் பெயரையும் தவறாக பயன்படுத்தி உங்களிடமிருந்து பணத்தை பெறுவதற்காக நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .எனவே தயவு செய்து யாரும் பணத்தை அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.