குன்றத்தூர் கோவில் அருகே கட்சி கூட்டம் நடத்த தடை விதிக்க கோரிக்கை

குன்றத்தூர் கோவில் ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள சாலையில் அரசியல் கட்சிகளின் தெருமுனை கூட்டம் நடத்த தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2024-02-22 11:37 GMT

கோவில் அருகே நடந்த கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே மாங்காட்டில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள சாலையில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தெருமுனை கூட்டம், தலைவர்களின் பிறந்த நாள் விழா கூட்டங்கள் நடந்தப்படுகின்றன.

இதற்காக இந்த சாலையில் மேடை அமைத்து, கூட்டம் நடக்கும் நாள் முழுதும் பாடல்கள் ஒலிக்க விடுகின்றனர். இதனால், கோவிலின் உள்ளே அமைதியான முறையில் தரிசனம் செய்ய முடியாமல், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Advertisement

அரசியல் கட்சியினர், தங்கள் கார், பைக், வேன் உள்ளிட்ட வாகனங்களை, கோவிலைச் சுற்றி நிறுத்துகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். லோக்சபா தேர்தல் துவங்கவுள்ளதால், கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எனவே, பக்தர்கள் நலன் கருதி, மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே, அரசியல் கட்சியினரின் கூட்டம்நடத்த, போலீசார் அனுமதி வழங்க கூடாது என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags:    

Similar News