பொன்னமராவதி விசைத்தறி கூடத்தை திறக்க கோரிக்கை!

பொன்னமராவதி விசைத்தறி கூடத்தை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-02-15 09:00 GMT

புதர் மண்டியுள்ள கூடம் 

பொன்னமராவதியில் பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நெசவு தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொன்னமராவதியில் 1989 ஆம் ஆண்டு விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்பட்டது. இதை அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த பா. சிதம்பரம் நிறுத்தி வைத்தார். இந்த விசைத்தறி கூடத்தில் நூல் மூலம் காடா துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

தொடக்கத்தில் நூறு தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் நாளடைவில் பணியாளர்கள் மற்றும் உற்பத்தி வெகுவாக குறைந்து பின்னர் சில ஆண்டுகளிலேயே விசைத்தறி கூட மூடப்பட்டது. இன்று இந்த கட்டடம் பாழடைந்து கருவேல மரங்கள் மண்டி காணப்படுகின்றது.

இந்த விசைத்தறிக்கூடத்தை மீண்டும் தொடங்கி நடத்த அரசு முன்வர வேண்டும். பொன்னமராவதி பகுதி மக்களின் வேலைவாய்ப்பு ஆதாரமாக இருந்த விசைத்தறிக்கூடம் மீண்டும் திறந்து வேலைவாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News