பாகசாலை பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை

பாகசாலை பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2024-05-06 15:21 GMT

கோப்பு படம் 

திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியை சுற்றி அரிசந்திராபுரம் தொழுதாவூர் பெரியகளக்காட்டூர் பாகசாலை உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 30 கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் மருத்துவ அவசர தேவைக்கு 5 - -- 13 கி.மீ., தூரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

Advertisement

இதற்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே உள்ளது. இதனால் தொலைவில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்கு, நோயாளிகளை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. பிரசவம் மற்றும் மற்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளுதல்,விபத்து மற்றும் அவசர சிகிச்சையின்போது, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது. அவசர நேரத்தில்ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும்போது திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் அரக்கோணம்,பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வர காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், முறையான சிகிச்சை அளிக்க முடியாத சூழலால், நோயாளிகள், சில சமயம் இறக்கும் சூழல் நிலவுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வுசெய்து 30 கிராமங்களுக்கு மையப்பகுதியான சின்னம்மாபேட்டையில், ஆம்புலன்ஸ்வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News