பழனியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய கோரிக்கை
பழனியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 11:05 GMT
கோப்பு படம்
பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தைப்பொங்கலுக்கு முன்பே அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
இவ்வாறு முன்கூட்டியே பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை தொடர்கிறது.இவற்றைக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும்.