பேருந்து நிலையத்தில் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-06-15 06:05 GMT
தரையில் அமர்ந்திருக்கும் பயணிகள்
காரைக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு பலர் தினமும் வந்து செல்கின்றனர். தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை. வெயில் காலம் என்பதால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அலைகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பயணிகள் அமர போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது