பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Update: 2023-12-21 07:47 GMT

பாத யாத்திரை 

மாவட்டத்தின் முக்கிய கோயிலாக பழநி முருகன் கோயில் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இக்கோயிலில் தை மாதம் பெரியளவில் தைப்பூசம் திருவிழா நடக்கிறது. இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதாயாத்திரையாக நடந்து வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல், கன்னிவாடி, ஒட்டன்சத்ததிரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரோட்டோரங்களில் நடந்து வருகின்றனர். இரவு நேரங்களில் பாதாயாத்திரையில் பக்தர்கள் ஈடுபடும் போது சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
Tags:    

Similar News