அன்னை தெரசா காலனியில் மழை நீரை அகற்ற கோரிக்கை
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சி ஆறாவது வார்டு பகுதிகளான அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் பாக்கியநாதன் விளையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
Update: 2023-12-24 06:27 GMT
தேங்கியுள்ள மழை நீர்
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த 17 ,18 ஆம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியது .எனினும் மழை விட்டு ஐந்து நாட்களாகியும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் முறையாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகள் கடந்த ஒரு வார காலமாக மழை நீரில் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் பாக்கியநாதன் விளை இந்த பகுதியில் சுமார் 200 வீடுகளை மழை நீர் குளம் போல் சூழ்ந்துள்ளது மாநகராட்சி நிர்வாகம் இந்த மழை நீரை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் தங்கள் பகுதி அருகே உள்ள காலிமனையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்