உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க கோரிக்கை !
உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 09:43 GMT
உயர்கோபுர மின்விளக்கு
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த திருமங்கலம் பகுதியில், சுங்குவார்சத்திரம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகில் உள்ள இந்த சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கு முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளதால், நான்கு மாதங்களுக்கு மேலாக எரியவில்லை. இதனால், சுங்குவார்சத்திரத்தில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருள் சூழ்ந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், வழிப்பறி, மொபைல்போன் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்."