குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய கோரிக்கை
குண்டும் குழியுமான சாலையை சீர் செய்து கொடுக்க அல்லூர் பனங்காடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-29 15:37 GMT
சேதமடைந்துள்ள சாலை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள அல்லூர் ஊராட்சி பனங்காடி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக இருப்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன.
பலமுறை இது குறித்து அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் சேதமடைந்த சிவகங்கையிலிருந்து பனங்காடி கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்