புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க கோரிக்கை!

மாணவர்கள் நலன் கருதி புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-01 04:52 GMT

பேருந்து 

பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாதபட்டி, கங்காணிப்பட்டி கிராமத்தில் சுமார் 6ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன்குறிச்சிக்கு சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஏழை மாணவ, மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சொக்கநாதபட்டி, கங்காணிப்பட்டி வழியாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News