தண்ணீர் தொட்டியில் இருந்த 2 பாம்புகள் மீட்பு
தண்ணீர் தொட்டியில் இருந்த விஷத்தன்மை கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகள் மீட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:20 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே.நகர் இந்திரா காலனியில் வசிக்கும் ராஜ்குமார் என்ப வர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று காலை வீடு கட்டும் பணியின் போது, சிமெண்ட் கலவை கலக்க, தண்ணீர் எடுப்பதற்காக தொட்டியில் பார்த்த போது தொட்டியில் பாம்பு இருப்பதை கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உரிமையாளர் ராஜ் குமார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீர் தொட்டியில் இருந்த விஷத்தன்மை கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகள் மீட்டனர். மீட்கப்பட்ட 2 பாம்புகளையும் வனச்சரகர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாதுகாப்பாக வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.