லால்குடியில் புதிய கட்டிடத்தில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பரமசிவபுரத்தில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் புகுந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு மீட்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-30 10:45 GMT
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பரமசிவபுரத்தில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகின்றனர்.இன்று இந்த கட்டிடத்தை பார்க்க வீட்டின் உரிமையாளர் சென்றபோது கட்டிடத்தின் உள்ளே 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருந்ததை கண்டு பயந்து வெளியே ஓடி வந்தார். இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, அருண் பாண்டியன், சுரேஷ் ,சசிகுமார் ,விஜய் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று கட்டிடத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.